போங்க தம்பி ரஞ்சி டிராபிக்கு.. பிளேயிங் XI-ல் நீக்கம் .. அடுத்த நொடி இந்திய டீமிலிருந்தும் தூக்கப்பட்ட வீரர்.. நடந்தது என்ன.?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியும், இந்திய அணி ஒரு வெற்றியும் பதிவு செய்துள்ளன.

- Advertisement -

இதற்கிடையில் மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அக்சார் பட்டேலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா இணைகிறார்.

- Advertisement -

எனினும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மூன்றாவது போட்டியிலும் விளையாடாதது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணியில் பல காலம் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த சர்ஃப்ராஸ்கான் இப்போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாக உள்ளார். மேலும் துரு ஜூரேலும் இப்போட்டியில் விளையாட வருகிறார்.

- Advertisement -

இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரண்டாவது போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். முகமது சிராஜிற்கு பதிலாக இரண்டாவது போட்டியில் வாய்ப்புப் பெற்ற முகேஷ் குமார் முதல் இன்னிங்ஸில் ஏழு ஓவர்கள் பந்து வீசி 44 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கட்டுகளை வீழ்த்தத் தவறினார்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதனால் பந்து வீச்சினை வலுப்படுத்தும் விதமாக முகமது சிராஜ் போட்டியில் இணைகிறார். இதனால் முகேஷ் குமார் மூன்றாவது போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிப்ரவரி 16ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் பீகார் அணிக்கு எதிராக ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இதனை பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. எனவே இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணி வீரர்களைக் காணலாம்.

இங்கிலாந்து விளையாடும் லெவன்: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (சி), பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய ப்ளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கே), யஷவ்சி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சர்பராஸ் கான், ரஜத் படிதார், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles