பணம் இல்லாத போது பணத்தின் அருமை அறிந்தவன் நான்.. எனக்கு இதுவே பெரிது.. குறைவான சம்பளம் குறித்த கேள்விக்கு ரிங்கு சிங்கின் பதில்

17 வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியது. இதில் இடம் பெற்று இருக்கும் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினாலும் ஐபிஎல்லில் குறைவான சம்பளமே பெற்று வருகிறார்.

- Advertisement -

இதை அடுத்து இவரது சம்பளம் குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்த நிலையில் அதற்கு அவரே தற்போது பதிலும் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் ஃபினிஷர் ஆக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் வருகிற டி20 உலக கோப்பையில் மாற்றுவீரராக பங்கேற்க அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். தற்போது இவர் விளையாடிய கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து அணியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடியதை அடுத்து இவரை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் அணியில் இடம் பெற்று விளையாடிய யாஷ் தயாள் ஓவரில் கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் உலகப் புகழ்பெற்றார். அதன் பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தானாகவே கிடைத்தது. இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினாலும் இவரது சம்பளம் ஐபிஎல்லில் 55 லட்சமாகவே இருந்து வருகிறது.

ரூபாய் 10 கோடி வரை வாங்க இவருக்கு தகுதி இவருக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இது தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் ரிங்கு சிங் இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் கிரிக்கெட் விளையாடிய துவங்கும் பொழுது இவ்வளவு தொகை ஊதியமாக பெறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

- Advertisement -

சிறுவயதில் எனக்கு தேவையான ரூபாய் 5 அல்லது 10 தொகையை எப்படியாவது சம்பாதித்துக் கொள்வேன். ஆனால் இப்போது 55 லட்சம் வரை சம்பாதிக்கிறேன். இதுவே எனக்கு அதிகமான தொகைதான். கடவுள் எனக்கு கொடுத்ததை வைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பணம் இல்லாத போது பணத்தின் அருமையை உணர்ந்தவன் நான். என்னைப் பொறுத்தவரை பணம் போல் எல்லாமே ஒரு மாயா தான்.

இதையும் படிங்க:நீங்க வேணா பாருங்க.. டி20 உலக கோப்பைல இவரோட ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

நாம் இங்கு பிறக்கும் போது எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல போவதுமில்லை. நமக்கான நேரம் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். எந்த வழியில் வந்தோமோ அதே வழியில் மீண்டும் செல்லத்தான் போகிறோம். அதனால் தன்னிலை அறிந்து தரையில்தான் எப்போதும் நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles