வருண் சக்கரவர்த்தி இல்லை.. நான் விளையாடியதில் கடினமான இரண்டு பவுலர்கள் இவர்கள்தான் – இஷான் கிஷன் பேட்டி

கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்த இந்திய அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார். மேலும் இவர் கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இவருக்கும் இடையே சில முரண்பாடுகள் காரணமாக இந்திய அணியை விட்டு ஓரங்கட்டப்பட்டார்.

- Advertisement -

அதற்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் நிலையில், t20 உலக கோப்பை தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இஷான் கிஷன் தான் எதிர்கொண்ட இரண்டு இந்திய கடினமான பந்துவீச்சாளர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் நான் விளையாடியதிலேயே கடினமான பவுலர் யுஸ்வேந்திர சஹாலை குறிப்பிட்டு பேசுவேன். அவரது பந்துவீச்சு விளையாட கடினமாக இருக்கும். அதே போல வேகப் பந்துவீச்சாளரை எடுத்துக் கொண்டால் பும்ராவை தவிர வேறு யாரை குறிப்பிட முடியும். அவரது பந்துகளை சௌகரியமாக விளையாடிவிட்டால் உடனே பவுன்சரை வைத்து நம்மை திக்கு முக்காட வைப்பார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles