நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வான பின்னர் அவருடைய இரண்டாவது போட்டியில் அற்புதமான ஆட்டம் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து இஷான் கிஷான் கூறும்போது “இன்று நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் எனது முழு கவனமும் இருந்தது. இன்று என்னால் நல்ல கிரிக்கெட் விளையாட முடியும் என்று உணர்ந்தேன். எனவே அதன்படியே ஆடுகளத்தில் என் திட்டத்தை செயல்படுத்தினேன். ஆபத்தான முறையில் அக்ராஸ் ஷார்ட் விளையாடி அவுட் ஆக கூடாது என்று நினைத்தோம். பவர் பிளேவில் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியமானது.
எனவே அதை குறிக்கோளாக வைத்து விளையாடினேன். உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி ரன்கள் எடுக்க உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சில சமயங்களில் அது நமக்கு சாதகமாக அமையும். என்னிடம் இன்று நான் ஒரு கேள்வி கேட்டுக் கொண்டேன். சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியுமா? என்பது தான் அது. இன்று நல்ல கிரிக்கெட் விளையாடி ரன்கள் எடுப்பதன் மூலமாக எனது சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் என்று உணர்ந்தேன். நான் அவுட் ஆனாலும் பரவாயில்லை நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் என் நோக்கம் அது நடந்தது” என்று பேசி இருக்கிறார்.

