பலமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான திட்டம் என்ன.? இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும் சீக்ரெட்.. முழு விவரம்

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றும் இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி இரு நாட்டு ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததன் மூலமாக புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய வெற்றி பெற்றதோடு ரன் ரேட்டிலும் தற்போது நல்ல நிலையில் இருக்கிறது.

- Advertisement -

எனவே அடுத்து வருகிற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அறை இறுதிக்கு தகுதி பெற்று விடலாம் என்கிற சூழ்நிலையில் அந்த அணியை வீழ்த்த கேப்டன் சூர்யா சில முக்கிய விஷயங்கள் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் தெளிவான திட்டத்துடன் விளையாடினோம் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி சற்று வேறுபட்டது. சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு நாங்கள் திட்டங்களை அமைப்போம். அதனால் இப்போதே பேட்டிங் வரிசை குறித்து எதுவும் உறுதியாக கூற முடியாது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles