பவர் பிளேவில் போட்டியை ஜெயிக்க முடியாது ஆனால் தோக்க முடியும்.. அதற்கு இதான் சான்று.. தோல்வி குறித்து இந்திய கேப்டன் பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்தது தென் ஆப்பிரிக்க அணி இருவது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதற்குப் பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 18.5 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இதன் மூலமாக இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இனி இந்திய அணி வருகிற இரண்டு போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. மேலும் தென்னாப்பிரிக்க அணியின் முடிவை பொருத்தே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா? அல்லது வெளியேறுமா? என்பது பின்னரே தெரியவரும். இந்த சூழ்நிலையில் இந்த போட்டியின் தோல்வி குறித்து கேப்டன் சூர்யா சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த போட்டியின் தொடக்கத்தில் நாங்கள் சிறப்பாகவே இருந்தோம் பவர்பிளைவில் முக்கிய 3 விக்கெட்டுகள் கைப்பற்றினோம். மேலும் இறுதி ஓவர்களில் சிறப்பாகவே விளையாடினோம். நாங்கள் பேட்டிங் செய்த போது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் மேற்கொண்டு அதிரடியாக விளையாட முடியவில்லை. ஒரு போட்டியில் நீங்கள் பவர் பிளேவில் வெல்ல முடியாது. ஆனால் பவர் பிளே மூலமாக தோல்வியடைய முடியும். எனவே அடுத்த போட்டியில் இன்று தவறுகளை சரி செய்து மீண்டு வர முயற்சிப்போம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles