டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச அணி டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்த்தது.
இதனால் வங்கதேச அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணி எதிரான போட்டிகளில் நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் இதற்கு எதிர் வினை தெரிவித்து இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள். இதனால் கிரிக்கெட் வட்டாரம் தற்போது பரபரப்பாக மாறிய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கேள்வி நேரடியாக கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் “பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம். அவர்கள் தான் எங்களோடு விளையாட மாட்டோம் என்று மறுக்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டபடி போட்டிகளை தயாரித்துள்ளது. டெல்லி போட்டிக்கு பிறகு இலங்கையில் உள்ள கொழும்பு செல்ல ஏற்கனவே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து விட்டோம்” என்று கேப்டன் பேசி இருக்கிறார்.

