தொடர்ந்து ஒதுக்கப்படும் ருதுராஜ்.. மறைக்காம சொல்றேன் உண்மையான காரணம் இதுதான் – இந்திய கேப்டன் சூரியகுமார் ஓப்பன் டாக்

ஜூலையில் நடைபெற்று முடிந்த டி20I தொடரில், ஜிம்பாவேக்கு எதிராக இந்திய அணியின் வீரர் ருதுராஜ் கைக்வாட் சிறப்பாக விளையாடினார். அவர், இரண்டு போட்டிகளில் 77 மற்றும் 49 ரன்கள் குவித்தார். ஆனாலும், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

இதனைக் குறித்து பத்திரிக்கை மாநாட்டு ஒன்றில் பேசிய சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கைக்வாட் ஜிம்பாவே அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார் என பாராட்டினார். அதோடு, தென்னாப்பிரிக்கா டி20I தொடருக்கான அணியில் அவரை சேர்க்காத முடிவையும் அவர் ஆதரித்தார்.

- Advertisement -

மேலும் அவர், “ ருதுராஜ் கைக்வாட் தனது திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்புகளைப் பெறுவார்” என்ன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு முன்னால் பல வீரர்கள் உள்ளனர்:

இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20I தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது, “ருது (ருதுராஜ்) ஒரு அற்புதமான வீரர். அவர் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். ஆனால் அவருக்கு முன்பிருந்தே பல வீரர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். எனவே, நிர்வாகம் ஏற்கனவே சிறப்பாக செயலாற்றிய வீரர்களின் வரிசையை பொருத்தே, தேர்வு முறையை பின்பற்ற முயற்சித்து வருகிறது”

மேலும் அவர், “ருத்ராஜ் மிகவும் இளமையான வீரராக இருந்த போதிலும், அவர் தனது பணியே மிகவும் சிறந்த முறையில் செய்து வருகிறார். ஆனாலும், நான் எனது தனிப்பட்ட முறையில் என்ன எண்ணுகிறேன் என்றால் அவருடைய நேரமும் விரைவில் வரும்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -

சூர்யகுமார் யாதவ், ருத்ராஜை தேர்ந்தெடுக்காத முடிவை ஆதரித்த அதே வேளையில், அவரை பாராட்டியும் உள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles