ரிசப் பண்ட்டை 3ம் வரிசையில் நாங்கள் இதற்காகத்தான் களம் இறக்கினோம்.. அமெரிக்க மைதானத்தில் எங்கள் இலக்கு இது ஒன்றுதான்.. ரோகித் சர்மா பேட்டி

டி20 உலக கோப்பையில் இந்தியா, வங்காளதேச அணிளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்தும், நியூயார்க் மைதானத்தில் புதிய சூழ்நிலையில் விளையாடியது குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் டி20 உலக கோப்பையில் குரூப் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும் நாக் அவுட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களிலும் நடைபெற உள்ளது. இதனால் அமெரிக்க ஆடுகளங்களைப் பழகத் திட்டமிட்டு இந்திய அணி அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு அளித்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் ஐந்து விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது ரிசப் பண்ட் 32 பந்துகளில் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்தனர். அடுத்து ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
“நாங்கள் இந்த போட்டியில் என்ன நடக்க வேண்டும் என்று நினைத்து களம் இறங்கினோமோ அது நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் சூழ்நிலைகளை பழக வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

- Advertisement -

இது புதிய ஆடுகளம், புதிய மைதானம் என அனைத்துமே புதிதாக இருந்தது. இருப்பினும் நாங்கள் நினைத்தது நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரிஷப் பண்ட் இந்த போட்டியில் மூன்றாவது வரிசையில் பேட்டிங் இறங்கியது அவர் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்பதற்காகத்தான். அவரது பேட்டிங் வரிசையில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் போட்டியில் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்பது எங்கள் எண்ணமாக இருந்தது.

இதையும் படிங்க:வேகப்பந்து வீச்சு மீது ஆர்வமே எனக்கு இதைப் பார்த்துதான் வந்தது.. எனது யார்க்கர் பந்து வீச்சின் ரகசியமும் இதுதான்.. பும்ரா பிரத்யேக பேட்டி

அர்ஸ்தீப் சிங் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். முன்னும் பின்னும் என அபாரமாக பந்து வீசி தனது திறமையை வெளிப்படுத்தினார். எங்கள் அணியில் 15 வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு 11 வீரர்களை ஒவ்வொரு போட்டியிடும் களம் இறக்க போகிறோம் இன்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார். இந்த போட்டியில் பெற்று வெற்றி இந்திய அணியை உலகக் கோப்பையில் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles