பேட்டிங் பயிற்சியில் முக்கியமான வீரர்கள்.. முதல் டெஸ்ட் தோல்விக்கு அதுவே காரணம்.. முன்னெச்சரிக்கையான கவுதம் கம்பீர்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நாளை தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு கீழ் வரிசை வீரர்களின் பேட்டிங் பங்களிப்பு இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முதல் இன்னிங்சில் 41 ரன்களுக்கு 7 விக்கெட்டை இந்தியா பறிகொடுத்தது.

- Advertisement -

கம்பீர் எடுத்த முடிவு

அதேபோல் 2வது இன்னிங்சில் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. அதேபோல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களை குவிக்க கீழ்வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது. வோக்ஸ், டங்க், பஷீர், பிரைடன் கார்ஸ் என்று அனைவரும் சிறந்த பங்களிப்பை செய்தனர்.

- Advertisement -

இதனால் இந்திய அணி பயிற்சியாளர்கள் நேற்று பவுலர்களான பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட பலருக்கும் பேட்டிங் பயிற்சியை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதற்கு பும்ரா, முகமது ஷமியின் பேட்டிங்கும் முக்கிய காரணம்.

- Advertisement -

பவுலர்கள் பயிற்சி

இதனை உணர்ந்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பவுலர்களுக்கும் பேட்டிங் பயிற்சியை கொடுத்திருக்கிறார். இதனிடையே பயிற்சிக்கு முன்பாக சிராஜின் பேட் உடைந்தது பேசுபொருளாகியது. இதுதொடர்பாக ஆகாஷ் தீப் பேசும் போது, நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் வரிசையை பாருங்கள். அந்த இடத்தில் இறங்கும் போது, ஒன்று ஆட்டம் பேலன்ஸுடன் இருக்கும். அந்த நேரத்தில் கொத்தாக விக்கெட் கொடுக்க கூடாது.

அதேபோல் ஆட்டம் முடிவடைந்திருக்கும். ஆனாலும் கொஞ்சம் தாக்குபிடிக்க வேண்டும். அதனால் என்னால் கூடுதலாக 20, 30, 35 அல்லது 40 ரன்களை சேர்க்க முடிந்தால், அது அணிக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். அதேபோல் பேட்ஸ்மேனுடன் இணைந்து விளையாடும் போது அவர்களின் திட்டத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles