சாம்பியன் கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. பும்ரா அபார பந்து வீச்சு

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

பார்படாஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் இன்னிங்சை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் துவங்கினார்கள். ரோகித் சர்மா இம்முறை ஒன்பது ரன்களில் மகாராஜா பந்துவீச்சில் ஸ்வீப் சாட் அடிக்க முயன்று ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய பண்ட் இரண்டாவது பந்தில் மகாராஜாவின் பந்து வீச்சிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சூரியகுமார் யாதவும் வெளியேற, இந்திய அணி 34 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் விராட் கோலியுடன் அக்சார் பட்டேல் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி ஒரு முனையில் நங்கூரம் போல் நிலைத்திருந்து விளையாட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த அக்சார் பட்டேல் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 47 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அடுத்ததாக களம் இறங்கிய சிவம் தூபே 16 பந்துகளில் 27 ரன்கள் குவிக்க, தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். 48 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி மொத்தமாக 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஹென்றிக்ஸ் நான்கு ரன்களில் பும்ராவின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டீ காக் 31 பந்துகளில் 39 ரன்கள் குவிக்க, மார்க்ரம் நான்கு ரன்களிலும் ஸ்டெப்ஸ் 31 ரன்களிலும் வெளியேறினார்கள். பின்னர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிளாசன் 27 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என 52 ரன்கள் விளாசி ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் வெளியேற அதன் பிறகு ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்தது.

- Advertisement -

பின்னர் இறுதிப் ஓவரை சிறப்பாக வீசிய ஹார்திக் பாண்டியா அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியதால் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இதையும் படிங்க:இப்படிலா எனக்கு யாரும் பண்ண வேணாம்.. அதுல எனக்கு விருப்பமும் இல்லை- டி20 உ. கோ குறித்து டிராவிட் கருத்து

2007ம் ஆண்டு கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியா, அதற்கு பிறகு உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறியது. ஆனால் இம்முறை தொடக்க முதலே ஆக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles