இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையில் முதல் 2 பந்துகளிலேயே ஓவர்டன் 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினர்.
பிரசித் கிருஷ்ணா பவுலிங்
இதனால் இங்கிலாந்து வெற்றிக்கு 27 ரன்கள் போதும் என்ற நிலை உருவாகியது. அதன்பின் சிராஜ் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 3வது பந்திலேயே ஜேமி ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த, மீண்டும் அவர் வீசிய அடுத்த ஓவரில் ஓவர்டன் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அட்கின்சன் – டங்க் கூட்டணி இணைந்தது. இருவரும் நிதானமாக விளையாட, பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் டங்க் போல்டாகி வெளியேற, திடீரென கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். ஒரு கையில் பேட்டிங் ஆட வோக்ஸை வரவேற்று இரு நாட்டு ரசிகர்களும் கைகளை தட்டினார். அதன்பின் அட்கின்சன் அதிரடியாக விளாசி தள்ளினார்.
சாதித்த முகமது சிராஜ்
தூக்கி அடித்த ஒரு பந்து ஆகாஷ் தீப் கைகளுக்கு நேராக செல்ல, அது சிக்சராக மாறியது. இதன்பின் துருவ் ஜுரெல் ரன் அவுட்டையும் தவறவிட, ஆட்டத்தின் பரபரப்பு எகிறியது. இதன்பின் சிராஜ் வீசிய ஓவரின் முதல் பந்தையே யார்க்கராக வீசினார். அதனை கணிக்காமல் அட்கின்ச பேட்டை சுற்ற, அது நேராக ஸ்டம்பை தகர்த்தது. இதன் மூலமாக இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இதன் மூலமாக 2-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தி இருக்கிறது. இந்திய அணியின் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக ஆடிய 2 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி சமன் செய்து அசத்தி சாதனை படைத்துள்ளது. முகமது சிராஜின் ஆட்டத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

