தனியாளாக போராடிய திலக் வர்மா.. உதவியாக நின்ற சிவம் துபே.. ஆசியக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா

ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

- Advertisement -

போராடிய திலக் வர்மா

இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா – சுப்மன் இணை களமிறங்கியது. இதில் 2ஆவது ஓவரிலேயே அபிஷேக் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் சூர்யகுமார் 1 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் திலக் வர்மா – சஞ்சு சாம்சன் இணை நிதானமாக ரன்களை சேர்த்தது. 

- Advertisement -

4வது விக்கெட்டுக்கு இருவரும் நிதானமாக 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதானமாக ஆடிய சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, சிவம் துபே களம் புகுந்தார். இதையடுத்து திலக் வர்மா அதிரடி காட்ட, சிவம் துபேவும் விளாச தொடங்கினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 24 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 

- Advertisement -

இந்தியா வெற்றி

இதன் இடையில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்பின் பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்ய, கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் சிவம் துபே அபார சிக்ஸ் அடிக்க, இந்திய அணி வெற்றிக்கு நெருக்கமாக சென்றது. 

அப்போது சிவம் துபே 33 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. பின் ரிங்கு சிங் வந்தார். கடைசி ஓவரை வீச ஹாரிஸ் ராஃப் வந்தார். அப்போது திலக் வர்மா 2, 6, 1 மற்றும் 4 என்று இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 9வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது. 

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles