இந்தியா வங்காளதேசம் பயிற்சி போட்டி.. நியூயார்க் பிட்ச் புதிய ஆடுகளம்.. இந்திய அணிக்கு சாதகமா?. முழு விபரம்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இன்று இந்தியா, வங்காளதேச அணிகளுக்கான முதல் பயிற்சி போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பாகவே இந்திய அணி வீரர்கள் பாதிப்பேர் அமெரிக்கா வந்தடைந்ததால் தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்தப் போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்க உள்ளனர். மேலும் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியே வருகிற லீக் போட்டிகளிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விராட் கோலி நேற்று தான் அமெரிக்கா சென்றிருப்பார் என்பதால், அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படும். இதனால் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணியே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்கா மைதானங்களிலேயே நடைபெற உள்ளதால் இந்திய அணி இந்த சூழலை நன்கு புரிந்து கொள்ள முயற்சிக்கும்.

- Advertisement -

மேலும் இது பயிற்சி போட்டி என்பதால் இந்திய அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் நியூயார்க் நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆடுகளத்தை தயாரிக்க அமெரிக்காவிலிருந்து மண் கொண்டுவரப்பட்டு தயார் செய்யப்பட்டதால் இது பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆடுகளத்தில் சாதாரணமாக 200 ரன்கள் அடிக்கும் விதமாக இருப்பதால், இது இந்திய அணிக்கே சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் வங்கதேச அணியும் தற்போது நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரையே கோட்டை விட்டதால் அந்த அணி தற்போது நம்பிக்கை இழந்து காணப்படும். எனினும் இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கிடையே சிறப்பாக செயல்படும் அந்த அணி தகுந்த போட்டியை தர முயற்சிக்கும்.

- Advertisement -

லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், நாக் அவுட் சுற்றுகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களிலும் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் சிவம் தூபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களை தவிர எந்த சூழ்நிலையிலும் இவர்கள் களம் இறக்கப்படலாம் என்பதால் இவர்கள் மீதும் இந்திய அணி கவனம் வைக்கும்.

இதையும் படிங்க:இதைத்தான் இவ்வளவு நாட்களாக இழந்துவிட்டது போல் உணர்ந்தேன்.. இங்கிருந்து என் வாழ்க்கை சிறப்பாக அமையும்.. ரிஷப் பண்ட் நம்பிக்கை

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணியும், குரூப் பி பிரிவில் வங்கதேச அணியும் இருக்கின்றன. இந்திய அணிக்கு இந்தப் போட்டியை தவிர மற்றொரு பயிற்சி போட்டியில் உள்ளது. இதை தொடர்ந்து வருகிற ஐந்தாம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டி எதிர் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles