ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து ஹாங் காங் அணி ஆடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஹாங் கான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய vs யுஏஇ
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த அணி சுமார் ஒரு மாதத்திற்கு பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்ததோடு, சுப்மன் கில் ஓய்வில் இருந்ததால் தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
என்ன சேனல், எத்தனை மணி?
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரை எந்த சேனலில் பார்க்க வேண்டும், எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதன்படி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கு 7.30 மணிக்கு டாஸ் போடப்படும். அதன்பின் இரவு 8 மணிக்கு முதல் பந்து வீசப்படும். இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
அதேபோல் சோனி செயலியிலும் நேரடியாக ரசிகர்கள் காணலாம். ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ரசிகர்கள் நேரடியாக ஒளிபரப்பை பார்க்க முடியாது. இதற்கேற்ப ரசிகர்கள் தயாராக வேண்டும். ஐக்கிய அரபு அமீரக அணியின் பவுலிங் முன்னேற்றம் அடைந்துள்ளதால், இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

