IND vs ENG: சச்சின் டெண்டுல்கர் – ஜேம்ஸ் ஆண்டர்சன் டிராபி.. பெயரை மாற்றும் ஐசிசி.. மிகப்பெரிய கவுரவம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில், அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. ஏற்கனவே பயிற்சி போட்டிகளில் இந்தியா ஏ அணி விளையாடி வரும் நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து புறப்பட உள்ளனர்.

- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து

ஜூன் 20ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் களமிறங்க உள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கும் முனைப்புடன் கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். இம்முறை இந்திய அணியில் கம்பீரின் ஆதிக்கம் தீவிரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இத்தனை ஆண்டுகளாக பட்டவுடி டிராபி என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை பெயர் மாற்றம் செய்ய ஐசிசி முன் வந்துள்ளது. இந்திய ஜாம்பவான் ஒருவரின் பெயரையும், இங்கிலாந்து ஜாம்பவான் ஒருவரின் பெயரையும் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி

அதன்படி டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி என்று பெயர் வைக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எப்படி இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பார்டர் – கவாஸ்கர் டிராபி என்று அழைக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் இனி டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி என்று அழைக்கப்பட உள்ளது. 

இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கரும், இங்கிலாந்து அணிக்காக ஆண்டர்சனும் தான் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்கள். சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளிலும், ஆண்டர்சன் 186 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்கள். இதனால் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் இந்த டெஸ்ட் மீதான எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறது. 

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles