மீண்டும் வேலையை காட்டிய மழை.. சோகத்தில் ஆஸ்திரேலியா.. சாதித்து காட்டிய கம்பீர் – சூர்யகுமார் யாதவ்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காபா மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 

- Advertisement -

இந்த இரு வீரர்களுமே அதிரடியாக ரன்களை குவித்தனர். அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 4.5 ஓவர்களில் 52 ரன்களாக இருந்த போது, திடீரென மழை கொட்ட தொடங்கியது. இதன்பின் சுமார் 2 மணி நேரமான போதும், மழை நின்ற பாடில்லை. 

- Advertisement -

இதையடுத்து போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் டி20 போட்டியும் மழையால் ரத்தானது. இந்தப் போட்டியில் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலமாக கம்பீர் – சூர்யகுமார் யாதவ் கூட்டணி ஒருமுறை கூட டி20 தொடரை இழக்காமல் பயணித்து வருகிறது.  

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles