இந்தியா vs நமிபியா.. இந்திய பிளேயிங் லெவன்.. பாகிஸ்தான் போட்டிக்கு ஒத்திகை.. கம்பீர் மாஸ்டர் மூவ்

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நாளை இந்திய அணி நமிபியா அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கான திட்டங்களை கம்பீர் ஒத்திகை பார்ப்பார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி இலங்கையில் நடைபெறுவதால் சுழல் பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இதை காரணமாக வைத்து நாளை குல்தீப் யாதவுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக இடம்பெறாத பும்ரா தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாக அவர் அடுத்த போட்டியில் களம் இறங்குவது உறுதி என்று தெரிகிறது. அதே சமயத்தில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கிறது. எனவே அவர் நாளை விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் இஷான் கிஷான் உடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம்.

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன், இசான் கிஷான், சூரியகுமார் யாதவ் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே, அர்ஸ்தீப் சிங், பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறலாம்.

- Advertisement -

ஒருவேளை நாளையே பாகிஸ்தான் போட்டிக்கு திட்டத்தை ஒத்திகை பார்க்க நினைத்தால் அர்ஸ்தீப் சிங் இடத்தில் குல்தீப் யாதவை கம்பீர் களம் இறக்கலாம். ஏனென்றால் நமீபியா அணி சிறிய அணி என்பதால் பரிசோதனை முயற்சி செய்வதில் பிரச்சனை இருக்காது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles