கடைசி வரை போராடிய ஜடேஜா, சிராஜ்.. பஷீர் வீசிய பந்தில் நடந்த ட்விஸ்ட்.. லார்ட்ஸில் 22 ரன்களில் தோல்வியடைந்த இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 4வது நாளில் 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 4வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

இதன்பின் 5வது நாள் ஆட்டத்தை கேஎல் ராகுல் – ரிஷப் பண்ட் கூட்டணி தொடங்கியது. கேஎல் ராகுல் நிதானமாக விளையாட, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். ஆனால் ஆர்ச்சர் வீசிய தரமான பந்தில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பின் கேஎல் ராகுல் 39 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினர். 

- Advertisement -

பின்னர் ஜடேஜா – நிதீஷ் குமார் ரெட்டி இணை ரன்களை எடுக்காமல் டிஃபென்ஸ் ஆட தொடங்கியது. ஆனால் உணவு இடைவேளைக்கு ஒரு ஓவருக்கு பின் நிதீஷ் குமார் ரெட்டியும் 13 ரன்களில் வெளியேற, இந்திய அணியின் தோல்வி கண் முன் தெரிந்தது. ஆனாலும் 9வது விக்கெட்டுக்கு ஜடேஜா – பும்ரா இணை போராடியது. பும்ரா சுமார் 53 பந்துகளில் நிதானமாக ஆடி, ஜடேஜாவுக்கு கம்பெனி கொடுத்தார். 

- Advertisement -

போராடிய ஜடேஜா

ஆனால் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஷார்ட் பாலில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு 5 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 147 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் இந்திய அணி வெற்றிக்கு 46 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ந்து சிராஜ் உடன் ஜடேஜா கடுமையாக போராடினார். 

கடைசியாக இந்திய அணி வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட போது, பஷீர் வீசிய பந்தில் சிராஜ் டிஃபென்ஸ் ஆடிய பந்து ஸ்டம்பில் அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய ஜடேஜா 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles