பாவம் சுப்மன் கில்.. கேப்டனான முதல் ஒருநாள் தொடரிலேயே தோல்வி.. ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் இந்திய அணி தோல்வி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2வது போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை சேர்த்தது. 

- Advertisement -

சொதப்பிய இந்திய அணி

இந்திய அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மா 73 ரன்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 61 ரன்களையும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஹர்சித் ராணாவின் அதிரடி காரணமாக இந்திய அணி இந்த இலக்கை எட்டியது. இதையடுத்து 265 ரன்கள் என்ற சொற்ப இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் – டிராவிஸ் ஹெட் இணை களமிறங்கியது. 

- Advertisement -

இதில் மிட்சல் மார்ஷ் 11 ரன்களில் ஆட்டமிழக்க, ஹெட் – ஷார்ட் இணை நிதானமாக ரன்களை சேர்த்தது. கவனமாக ஆடிய ஹெட் 40 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேற, ஷார்ட் – ரென்ஷா இணை பார்ட்னர்ஷிப் அமைத்தது. 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது, ஷார்ட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, கேரி 9ரன்களில் வெளியேறினார். 

- Advertisement -

அசத்திய கொனொலி

ஆனால் ஷார்ட் – கொனொலி இணை இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கியது. ஒரு கட்டத்தைல் ரன் ரேட் 6 ரன்களுக்கு மேல் செல்ல, உடனடியாக சில சிக்சர்களை விளாசினார். அதன்பின் ஆட்டம் ஆஸ்திரேலியா அணியின் கைகளுக்கு சென்றது. சிறப்பாக ஆடிய ஷார்ட் 74 ரன்களையும், மிட்சல் ஓவன் 36 ரன்களையும் விளாசினர். இதன்பின் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 6 ஓவர்களில் 13 ரன்கள் தேவையாக இருந்தது. 

அப்போது அர்ஷ்தீப் சிங் பந்தில் பார்ட்லெட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து சிராஜ் வீசிய ஓவரில் ஸ்டார்க் 4 ரன்களில் வெளியேற, இறுதியாக 46.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது. சுப்மன் கில் கேப்டனாக தொடங்கிய முதல் தொடரிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். 

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles