கோச் ஆனதும் தூங்காத நைட் எல்லாம் இருக்கு.. எல்லாத்தையும் சொல்ல இவங்க தான் இருக்காங்க – கம்பீர் உருக்கமான பேச்சு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து மிகவும் உருக்கமான முறையில் பேசி இருக்கிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு விஷயங்கள் சிறப்பான முறையில் செல்லாத போது அதை எப்படி கடந்து வந்திருக்கிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார். மேலும் இதற்கு யார் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்? என்பது குறித்தும் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “வீடு என்பது அன்பு. அது உங்கள் குடும்பம் இருக்கும் இடம். வீடு என்பது அமைதியைப் பெறும் இடம். எனக்கு வீடு எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஆனால் நீங்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சிளாக இருக்கும் பொழுது நீங்கள் தனிமையான இரவுகளையும் கடக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் வழியில் விஷயங்கள் சரியாக செல்லாத போது அது மிகவும் மோசமானதாக இருக்கும். எனவே உங்களுக்கு அணியில் நம்பகமான ஊழியர்கள் இருக்கும் பொழுது அவர்களிடம் உங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால் அந்த நேரத்தில் நம் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு புரியும்”

- Advertisement -

“உண்மையில் இந்த தொழிலில் இருக்கும் பொழுது நீங்கள் உங்கள் குடும்பத்திடம் பகிர்ந்து கொள்வதை விட இவர்களிடம்தான் அதிக விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இந்த தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் அறிவார்கள். உங்கள் வழியில் விஷயங்கள் போகாத போது எப்படியான மனநிலை இருக்கும் என்று அவர்கள் அறிவார்கள். மேலும் எல்லா வீரர்களும் அவர்களாகவே இருக்கும் வேடிக்கையான தருணங்கள் உண்டு. நாங்கள் அப்படியான வேடிக்கையான தருணங்களை ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறோம். இது அணியின் சூழ்நிலையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles