இந்தியாவை காப்பாற்றிய கேப்டன் துணை கேப்டன்.. வரலாறு படைக்குமா இந்திய அணி.. ரோகித் அபார ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடியிருக்கின்றனர்.

- Advertisement -

கயானாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மழையின் காரணமாக ஒரு மணி நேரம் போட்டி தாமதமாக தொடங்க, அதன் பிறகு டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க, விராட் கோலி ஒரு சிக்சர் அடித்த நிலையில் டாப்லீயின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ரோகித் சர்மா சற்று நிதானமாக விளையாட மறுமுனையில் விக்கெட் கீப்பர் பண்ட் 4 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு சூரியகுமார் யாதவ் ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு விளையாடினர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 73 ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 39 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து 59 ரன்கள் குவித்த நிலையில் அடில் ரஷீத்தின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஹார்திக் பாண்டியா சூரியகுமார் யாதவ் உடன் பாட்னர்ஷிப் அமைக்க இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. இடையில் சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவும் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 23 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு சிவம் தூபே ஒரே ஒரு பந்தை மட்டும் எதிர்கொண்டு ஜோர்டன் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு களமிறங்கிய ஜடேஜா 9 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 17 ரன்களும் அக்சர் பட்டேல் ஆறு பந்துகளில் ஒரு சிக்சர் உடன் 10 ரன்கள் குவிக்க இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணித்தரப்பில் ஜோர்டன் மூன்று ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவி mக்க முடியாமல் சற்று தடுமாறினர் என்று தான் கூற வேண்டும்.

இதையும் படிங்க:மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி.. சிக்கலில் இருந்து தப்பிக்குமா இந்திய அணி.. மீண்டும் காப்பாற்றும் ரோஹித்

மேலும் இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அது இந்திய அணிக்கு பெரிதாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 171 ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோராக இருக்கும் என்று வல்லுனர்கள் கூறி இருக்கையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles