இந்தியா இங்கிலாந்து இடையிலான T20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார் முகமது ஷமி.
வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி நடக்கவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. இந்த அணியில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பினார்.
பிசிசிஐ 15 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவித்த நிலையில் அவர்களின் இடத்தை யார் பூர்த்தி செய்வார் என கேள்வி இருந்தன. இதை தொடர்ந்து பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர்கள் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் மீது கவனம் செலுத்தினர்.
ஓய்வு பெற்ற சில வீரர்கள்
T20 அணியில் சாம்சன், திலக், வருண், பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் போன்ற வீர்கள் முக்கியத்துவம் பெற்று நல்ல ஃபார்மில் உள்ளார்கள். சமீபத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட், கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷிட் ராணா மற்றும் நிதிஷ் ரெட்டி T20 அணியில் இடபெற்றுள்ளனர்.
இந்திய டி20 அணியின் விவரம்
சூர்யகுமார் யாதவ் (C), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (VC), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி , ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல்.
ஒருநாள் போட்டிக்கான அணியின் விவரம் பிப்ரவரி அறிவிப்பு வெளியாகயுள்ளதாக தகவல்.

