இந்தியாவின் கனவு பலிக்காது.. எங்க ஏரியால நாங்க தான் மாஸ்.. தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் சவால் பேட்டி.!

2023-ஆம் ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்தியா தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட முழுமையான தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் மூன்று வடிவ தொடர்களுக்கும் மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். t20 அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டி அணிகளுக்கு கேப்டனாக கேஎல்.ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும் தொடருக்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த முறை விராட் கோலி தலைமையில் தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற இந்திய டெஸ்ட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது. ரோகித் சர்மா காயம் காரணமாக கலந்து கொள்ளாத நிலையில் 2022 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது கேஎல் ராகுல் ஒரு நாள் அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். எனினும் இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இழந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது 2023-25 ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்திற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி தனது முதல் தொடரை தென்னாப்பிரிக்காவில் சந்திக்க இருக்கிறது. எனவே புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடரை வென்று வெற்றியுடன் ஆரம்பிக்க இந்தியா முனைப்பு காட்டும். கடந்த இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் இந்தியா அணியால் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முடியவில்லை. எனவே இந்த முறை வெல்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்.

இதற்காக முழு பலம் கொண்ட டெஸ்ட் அணியை தென் ஆப்பிரிக்க தொடருக்காக தேர்வு செய்திருக்கிறது இந்திய தேர்வு குழு. எனினும் இந்திய அணியின் கனவு இந்த முறையும் பலிக்காது என தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் . இரண்டு அணிகளும் மோதிக்கொள்ள இருக்கும் இந்தத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என தெரிவித்த அவர் இரண்டு அணிகளுக்குமே இது ஒரு சவாலான தொடர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து விரிவாக பேசிய கான்ராட்” 2023-25 ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய சுற்று ஆரம்பமாக இருக்கிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியனிடம் இழந்தோம். இந்த முறை எங்களது புதிய துவக்கம் இந்தியாவிடம் இருந்து ஆரம்பமாக இருக்கிறது. இரண்டு அணிகளும் பலம் பாய்ந்த அணிகள் என்பதால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும். நாங்கள் இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கவே விரும்புகிறோம். இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றாலும் ஆடுகளம் இரு அணிகளுக்கும் சமமாகவே” இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” தென் ஆப்பிரிக்கா அணியின் இந்தியாவிற்கு எதிரான ஆதிக்கம் இந்த முறையும் தொடரும். தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டில் வைத்து இழந்ததில்லை என்ற பெருமையை பாதுகாக்க தகுதி வாய்ந்த வீரர்கள் எங்கள் அணியிடம் இருப்பதாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.. தென்னாப்பிரிக்காவில் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு இந்த முறையும் பலிக்காது என்ற ரீதியில் தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்” சுக்ரீ கான்ராட்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles