60 வருடத்தில் முதல் முறை.. ஹிட்மேன் ரோகித் சர்மா தைரியமான முடிவு.. பங்களாதேஷ் அணிக்கு லக்.. சாதிக்குமா இந்திய அணி.?

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் க்ரீன் பார்க் மைதானத்தில் துவங்கி இருக்கிறது. முன்னதாக டாஸ் நிகழ்வின் போது, சரியான கால் கேட்ட கேப்டன் ரோஹிட் ஷர்மா டாஸ்சை ஜெயித்து பீல்டிங்கை தெரிவு செய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் கிட்ட தட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு கான்பூர் மைதானத்தில் டாஸ் ஜெயித்த ஒரு அணி பீல்டிங்கை தெரிவு செய்து இருக்கிறதாம்.

- Advertisement -

பொதுவாகவே இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் தொடர், பல புது புது விநோத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அப்போது டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தெரிவு செய்தது, கிட்ட தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சிதம்பரம் மைதானத்தில் டாஸ் வென்று பீல்டிங்கை தெரிவு செய்த முதல் அணி என்ற நூதன சாதனையை வங்கதேசம் அப்போட்டியில் நிகழ்த்தியது.

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் கான்பூரில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, டாஸ் வென்று பீல்டிங்கை தெரிவு செய்தது. கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில், கிட்டதட்ட, 60 ஆண்டுகளுக்கு பிறகு, டாஸ் வென்று பீல்டிங்கை தெரிவு செய்த முதல் அணி, என்ற இன்னொரு விநோத சாதனையை இந்திய அணி இன்று நிகழ்த்தி இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியான இரண்டு விநோத சாதனைகளை இரண்டு அணிகளும் நிகழ்த்தி இருக்கின்றன.

- Advertisement -

இதே கான்பூரில் அன்றைய இந்திய அணி

இந்த கான்பூரில் மொத்தமாக 24 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறி இருக்கிறது. அதில் டாஸ் ஜெயித்த இரண்டு அணிகள் மட்டுமே பீல்டிங்கை தெரிவு செய்து இருக்கிறதாம், 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே கான்பூரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மன்சூர் அலிகான் தலைமையிலான இந்திய அணி, டாஸ் வென்று பீல்டிங்கை தெரிவு செய்து இருந்தது. அது ஒரு அட்டகாசமான போட்டி என்றே சொல்லலாம், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி, பேரி நைட், பீட்டர் பார்பிட் அவர்களின் சதத்தால் 559 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து டிக்ளேர் செய்து இருக்கும்.

- Advertisement -

அதற்கு பின் ஆடிய இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆகி இருக்கும். அதிகபட்சமாக திலிப் சாரதேசி மட்டும் 79 ரன்கள் எடுத்து இருப்பார். மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ்சை துவங்கிய இந்திய அணி சுதாரித்து ஆடி, மூன்று விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து, அந்த போட்டியை டிரா ஆக்கி இருக்கும். திலிப் சாரதேசி இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் 77 ரன்கள் எடுத்து களத்தில் கடைசிவரை நிற்பார்.

கான்பூர் மைதானத்தில் இதுவரை இந்தியா

இதுவரை இந்தியா கான்பூரில் 24 போட்டிகள் விளையாடி இருக்கிறது, அதில் 7 வெற்றிகள், 3 தோல்விகள், 13 டிராக்களை சந்தித்து இருக்கிறது. 60 வருடங்களுக்கு முன்பு இதே கான்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக மன்சூர் அலி கான் தலைமையிலான இந்தியா ஒரு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அது போல, இன்று ரோஹிட் ஷர்மா தலையிலான இந்திய அணியும், அட்டகாசமாக விளையாடி 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து காட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles