இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசு தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரர் இஸான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார் இதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடங்கும். இறுதிக்கட்டத்தில் சிவம் தூபே 17 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சில் தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 8 பந்துகளில் 5 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் 34 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். வந்து வீச்சில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் ஆரம்ப முதலே இந்திய அணிக்கு எதிராக பேசி வந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்களின் பேச்சுக்களை இந்திய அணி தவிடு பொடி ஆக்கியுள்ளது.

