இன்று அண்டர் 19 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.
ஏற்கனவே முதல் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இன்று இரண்டாவது அரை இறுதி போட்டிக்கு டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு பைசல் 93 பந்தில் 110 ரன்கள், நியாஸை 86 பந்தில் 101 ரன் குவித்தார்கள். அந்த அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 310 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியது. இந்திய அணியின் தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சவுகான் இருவரும் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு வைபவ் சூரியவன்சி அதிரடியாக 33 பந்தில் 68 ரன்கள், கேப்டன் ஆயுஸ் மத்ரே 59 பந்தில் 62 ரன்கள், சிறப்பாக விளையாடி சதம் அடித்த ஆரோன் ஜார்ஜ் 104 பந்தில் 115 ரன்கள், வியான் மல்கோத்ரா 47 பந்தில் 38 ரன் எடுத்தார்கள். இந்திய அணி இந்த இலக்கை 41 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு எட்டு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வருகின்ற ஆறாம் தேதி எதிர்கொள்கிறது.

