தென் ஆப்பிரிக்க போட்டியை மறந்துடுங்க.. வேற லெவல் 2 மாற்றம் செஞ்சிருக்கோம் ஜெயிப்போம் – சூரியகுமார் உறுதி

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருப்பது மகிழ்ச்சியான முடிவாக அமைந்திருப்பதாக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் எதிர்பார்த்தபடியே ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் கடந்த போட்டியில் விளையாடாத அக்சர் படேல் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு உள்ளே வந்திருக்கிறார். பகுதிநேர ஆப்ஸ் பின்னர்கள் முதல் ஓவர்களில் வருவதை தடுப்பதற்கு சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா உடன் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் நிகழ்வில் சூரியகுமார் பேசும்பொழுது “நாங்கள் இந்த முடிவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். முதலில் பேட்டிங் செய்வது எங்களுக்கு நல்ல விஷயம். ஒவ்வொரு போட்டியில் தோல்வியடையும் பொழுது நிறைய கற்றுக் கொள்கிறோம். எங்களுடைய அணி கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பான விஷயத்தை பேசி இருக்கிறார். தற்போது எங்கள் கேம்ப் மிகவும் ரிலாக்ஸாக வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை மறந்து விடுங்கள். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles