3 வீரர்கள் சதம், 3 வீரர்கள் டக் அவுட்.. 471 ரன்கள் குவித்த இந்திய அணி.. பட்டையை கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் அட்டாக்

இதன்பின் 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் சில ஓவர்கள் இரு பேட்ஸ்மேன்களும் நிதானம் காட்டிய நிலையில், பின்னர் பவுண்டரிகளை விளாச தொடங்கினார்கள். புதிய பந்து என்பதால் கொஞ்சம் ஸ்விங்கும் நன்றாக இருந்தது. இதனை அறிந்து ரிஷப் பண்ட் ஸ்பின்னர்களை அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினார். அதேபோல் வழக்கம் போல் வித்தியாசமான ஷாட்கள் மூலமாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

இதனால் கண்மூடி திறப்பதற்கு 99 ரன்களை எட்டிய ரிஷப் பண்ட், அந்த நேரத்தில் அபார சிக்ஸ் விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 7 முறை 90 ரன்களில் ஆட்டமிழந்திருப்பதால், அனைவரும் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் பதற்றமின்றி சிக்ஸ் அடித்துவிட்டு, ஸ்டைலாக பல்டி அடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் வெறியாட்டம்

இதன்பின் 150 ரன்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 147 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த கருண் நாயர் டக் அவுட்டாகி வெளியேறினார். அங்கிருந்து இந்திய அணியின் சரிவு தொடங்கியது. ஒரு பக்கம் ரிஷப் பண்ட் அதிரடியாக ரன்களை குவிக்க, மறுபக்கம் டெய்லண்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது இங்கிலாந்து அணி வீரர்கள் வந்து பாராட்டி சென்றனர். பின்னர் வந்த வீரர்களில் பும்ரா டக் அவுட்டாகினார். இறுதியாக இந்திய அணி 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டங்க் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மழை வருவது போல் இருப்பதால், இந்திய அணி பவுலிங் செய்வதற்கு இது சரியான தருணமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles