டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டி ஆட்டத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி ஏ மூன்று விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்தப் போட்டிக்கு இந்திய அணியின் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த திலக் வர்மா மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். இத்துடன் டாஸ் வென்ற யுஎஸ்ஏ அணி பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் இந்த அணிக்கு கேப்டனாக ஆயுஷ் பதோனி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணி அதிரடி
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் நாராயணன் ஜெகதீசன் அற்புதமாக விளையாடி சதம் அடித்து 55 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த இந்திய நட்சத்திர வீரர் திலக் வர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் காயத்திற்கு பிறகு திரும்பி வந்து எந்தவித சிரமமும் இல்லாமல் விளையாடியது இந்திய அணி நிர்வாகத்திற்கு நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது.
இந்திய கேப்டன் அதிரடி
இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்த இந்திய ஏ அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ஆயுஸ் பதோனி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து இறுதிவரை களத்தில் நின்று 26 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்தார்.
ஐந்தாவது இடத்தில் வந்த ரியான் பராக் விளையாடுவதற்கு நிறைய பந்துகள் கிடைக்கவில்லை. அவர் இரண்டு பந்துகளை சந்தித்து இரண்டு ரன்கள் எடுத்தார். இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்திருக்கிறது. தொடர்ந்து விளையாடிய யுஎஸ்ஏ 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் அவுட் ஆனது.

