2023 ஆம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய தொடராக கருதப்படுவது இந்தியா தென்னாப்பிரிக்கா தொடர் தான். காரணம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதுபோன்று சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்கா வந்து அடைந்து விட்டார்கள். எனினும் டி20 தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள்தான் எஞ்சியுள்ள நிலையில் இந்தியாவை சேர்ந்த மூன்று வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் வராதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
டி20 தொடரில் சீனியர் வீரர்கள் இடம்பெறாத நிலையில் கில் ஜடேஜா தீபக்சாகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஜடேஜாவும் கில்லும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறவில்லை. உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில்தான் தற்போது தென்னாப்பிரிக்கா தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த மூன்று வீரர்களும் இன்னும் தென் ஆப்பிரிக்கா வந்து அடையவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தீபக் சாஹரின் தந்தை மருத்துவமனையில் இருப்பதால் அவர் இன்னும் தென்ஆப்பிரிக்கா வந்து சேரவில்லை என தெரிகிறது.
எனினும் கில் மற்றும் ஜடேஜா ஆகியோர் இன்னும் சுற்றுலா முடிவடையாமல் இருப்பதால் அவர்கள் இந்திய அணிக்கு திரும்ப தயக்கம் காட்டி வருகிறார்கள். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. நாட்டுக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரண்டு சீனியர்களும் வராமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் போதிய ஓய்வு வழங்கப்பட்டும் மீண்டும் திரும்பாதது சகித்து கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மூன்று வீரர்களுமே தங்களுடைய நிலையை பிசிசிஐ யிடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

