IND vs PAK.. 8-0 லோடிங்.. 155 ரன்கள் 2 விக்கெட் .. 191 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை மூட்டை கட்டிய இந்தியா அபாரம்.!

தற்போது நடைபெற்று வரும் 13 வது 50 ஓவர் உலகக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று தொடங்கியது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பதிவீச்சு தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். எட்டு ஓவர்களுக்கு 41 ரன்கள் எடுத்த நிலையில் 20 ரன்கள் எடுத்திருந்த அப்துல்லா ஷபிக் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இமாம் உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்தார் பாபர் அசாம்.

- Advertisement -

இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 32 ரன்கள் சேர்த்து நிலையில் 36 ரன்கள் எடுத்த இமாம் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் பாபர் அசாம் உடன் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இருவரும் பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் அணியின் ரன் வேகமாக உயர்ந்தது.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். ரிஸ்வான் மற்றும் பாபர் இணைந்து 82 ரன்கள் சேர்த்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இலக்கம் 155 ஆக இருந்தபோது முகமது சிராஜ் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார் பாபர் அசாம். இவர் 58 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் சரிவும் தொடங்கியது.

பாபர் அசாமை தொடர்ந்து களத்திற்கு ஆட வந்த சவுத் ஷகீல் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க இதற்கு அடுத்ததாக ஆட வந்த இப்திகார் 4 ரன்கள் எடுத்த நிலையில் அதே ஓவரில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து பும்ரா வீசிய பந்தில் முகமது ரிஸ்வான் 49 ரன்களில் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி மிகப்பெரிய சர்வை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து சதாப்கான் 2 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டாக பாகிஸ்தான் அணி முழுவதுமாக இந்தியாவிடம் சரணடைந்தது.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து முகம்மது நவாஸ் நான்கு ரங்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 4 ரண்களில் ஆட்டம் இழக்க ஹசன் அலி 12 ரன்கள் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் எடுத்து கொடுத்து வெளியேறினார். இறுதி விக்கெட் ஆக ஹாரிஸ் ரவுப் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா சிராஜ் ஹர்திக் பாண்டியா குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்

இதனைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரோஹித் சர்மாவின் அதிரடியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றது. 12 ஓவர்கள் முடிவில் 88 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. ரோஹித் சர்மா 47 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles