இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பும்ரா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் போட்டியின் நடுவே ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரேஹான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
அப்போது பும்ரா வீசிய புல்டாஸ் பந்தை களத்தில் இருந்த ரேகான் எதிர்கொண்டார். அப்போது ஸ்கொயர் திசையில் ரேகான் பந்தை அடிக்க, அது பவுண்டரி லைனில் இந்திய பீல்டர் ஒருவரின் கையில் சென்றது. பீல்டர் விக்கெட் கீப்பரிடம் பந்தை வீச, அதை கீப்பரும் தவறவிட இதனால் பந்து பவுண்டரி லைனை அடைந்தது. அதற்குள் இரு பேட்ஸ்மேன்களும் இரண்டு ரன்கள் ஓடி எடுத்து விட மொத்தம் ஆறு ரன்களாக இங்கிலாந்து அணிக்கு முதலில் வழங்கப்பட்டது.
பின்னர் அதனைக் களத்தில் ஆலோசித்த நடுவர்கள் ஆறு ரன்களில் ஒரு ரன்னைக் குறைத்து 5 ரன்கள் மட்டுமே வழங்கினார். இது இங்கிலாந்து அணியினரிடம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இங்கிலாந்து அணி வீரர்கள் அம்பையரிடம் சென்ற முறையிட, அதற்கு விளக்கம் அளித்த அம்பயர் ஃபீல்டர் பந்தை கீப்பரிடம் எரியும்போது பேட்ஸ்மேன்கள் இருவரும் இரண்டாவது ரன்னிற்கு ஒருவரை ஒருவர் கடந்து சென்றிருக்கவில்லை.
இதனால் ஆறு ரன்களுக்கு பதிலாக 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார். ஆனால் இதே போன்ற ஒரு சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பையில் நடைபெற்றுள்ளது. அப்போது ஃபீல்டர் பந்தைய எரிய பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் கடந்து செல்லவில்லை எனினும் பந்து பௌண்டரி லைனை அடைந்தது. ஆனால் அப்போது ஆறு ரன்கள் வழங்கப்பட்டது.
ஆனால் எம்சிசி 19.8 விதிப்படி பீல்டர் பந்தை எறிவதற்கு முன் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து ஓடி ரன் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்தால் மட்டுமே அந்த ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை நேரில் கண்ட வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இணை வர்ணனையாளரான இயான் மோர்கனிடம் 2019-ல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இதனால் போட்டியில் சற்று பரபரப்பு நிலவியது.

