வீடியோ-ஜெய்ஸ்வால் செயலால் கடுப்பான ரோகித் சர்மா! மைக்கில் பதிவான வார்த்தைகள்.. என்ன நடந்தது?

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. அதேசமயம் இந்திய அணியும் முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணியின் அதிரடி வீரர் கில் நீக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, கில் நீக்கப்பட்டு இருப்பது தைரியமான முடிவு என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் மெல்போர்னில் வானிலை அடுத்த சில நாட்களில் வெப்பமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பும்ராவின் பந்துவீச்சு சுமையை குறைப்பதற்காக வாஷிங்டன் சுந்தர் கூடுதல் சுழற் வீச்சாளராக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மெல்போர்ன் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டிற்கு வருகிறது.

- Advertisement -

இதனை பயன்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலியா வீரர்கள் அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய  வீரர்களின் ரன் வேகத்தை குறைப்பதற்காக இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறது.  இந்த நிலையில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சில் கிடைக்க வேண்டும் என்றால் பில்டர்கள் பேட்ஸ்மேன்கள் அருகிலே நிற்கவைக்கப்படுவார்கள். இந்த  நிலையில் மார்னஸ் லாபஸ்சேன், உஸ்மான் கவஜா ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பேட்ஸ்மேன் அருகில் ஜெய்ஸ்வாலை ரோகித் சர்மா நிற்க வைத்தார்.

பந்து வீரர்களின் மீது படாமல் இருப்பதற்காக பல உபகரணங்களும் பாதுகாப்பிற்காக அணியப்படுவது வழக்கம். ஜெய்ஸ்வால் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பேட்ஸ்மேன் அடிக்கும் முன் பந்து வருவதற்கு முன்பே பயந்து ஜெய்ஸ்வால் குதித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் நீ என்ன தெருவிலா கிரிக்கெட் விளையாடுகிறாய்?

- Advertisement -

பந்து வருவதற்கு முன்பே ஏன் குதிக்கிறாய்.  பந்து வந்தவுடன்  ஒழுங்காக பில்டிங் செய் என்று ஹிந்தியில் கோபமாக திட்டினார். இந்த காட்சி ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. ரோகித் சர்மாவின் இந்த கோபமான வார்த்தைகள் ஜெய்ஸ்வாலை சோகமடைய செய்தது. எனினும் ரோகித் சர்மா தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் அவர் எப்போதும் போல் ஜாலியாகவே பேசி இருக்கிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles