சிராஜ்ஜை மறக்க மாட்டேன்.. ரொம்ப நன்றி! உச்சக்கட்ட டென்ஷன்! இதயமே நின்றுவிட்டது.. வாழ்நாளில் மறக்க முடியாத நாள்! கண்ணீர் சிந்திய நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நித்திஷ் குமார் ரெட்டி அடித்துள்ள சதம் இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3வது நாள் ஆட்டத்தை இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் தொடங்கிய நிலையில், முதல் ஒரு மணி நேரத்திலேயே ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இதன்பின் சுமார் 60 ஓவர்களுக்கும் மேலாக நித்திஷ் குமார் ரெட்டி – வாஷிங்டன் சுந்தர் இணைந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதனால் 3வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை சேர்த்திருக்கிறது. இன்னும் 116 ரன்கள் பின்னிலையில் இருப்பதாலும், 4வது நாளில் இந்திய அணி ஆதிக்கம் செய்யலாம் என்று ரசிகர்கள் நம்பியுள்ளனர்.

- Advertisement -

இன்றைய ஆட்டத்தில் நித்திஷ் குமார் ரெட்டி சதம் விளாசிய போது அவரின் தந்தை முத்யலா ரெட்டி கைகளை கூப்பி ஆனந்த கண்ணீருடன் நின்றிருந்தார். மெல்போர்ன் மைதானத்தின் முதல் வரிசையில் நின்று மகன் தனது முதல் சர்வதேச சதமடித்தை முத்யலா ரெட்டி பார்த்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட அனைவருமே நெகிழ்ச்சியடைந்தனர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வர்ணனையாளர்களே நித்திஷ் குமார் ரெட்டி சதமடிக்க வேண்டும் என்று பேச தொடங்கினர். அந்த அளவிற்கு மெல்போர்ன் மைதானத்தில் உணர்ச்சிகள் மேல் எழும்பி இருந்தன. இதன்பின் நித்திஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யலா ரெட்டி ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் உடன் பேசினர்.

அப்போது முத்யலா ரெட்டி கூறும் போது, இன்றைய நாள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். இந்த நாளினை எங்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. 14 -15 வயதில் இருந்தே நித்திஷ் ரெட்டி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் தொடர்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்பெஷலான உணர்வை அளிக்கிறது.

- Advertisement -

அவர் சதமடித்து முடிக்கும் வரை எனக்குள் பதற்றம் அதிகரித்து கொண்டே சென்றது. ஏனென்றால் கடைசி ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. நல்வாய்ப்பாக சிராஜ் 3 பந்துகளையும் சிறப்பாக எதிர்கொண்டார். அவர் 99 ரன்களில் இருந்த போது, கடவுளிடம் எப்படியாவது சதத்தை எட்டிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய தொடங்கிவிட்டேன்.

இந்த உணர்வை என்னால் எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. இந்த நாளுக்காக அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார். இந்த சதம் தான் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான பரிசு என்று நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி. அதேபோல் நித்திஷ் குமாரின் ரோல்-மாடலான விராட் கோலிக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் அவர் தான் நித்திஷ்-க்கு, கடின உழைப்பிற்கு மட்டும் எந்த மாற்றும் வழியும் இல்லை என்று கூறியவர் என்று பேசியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles