IND vs AUS.. 9 பந்து 11 ரன் தேவை.. நம்ப முடியாததை செய்த இந்திய அணி.. 4-க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை.!

உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் வைத்து இன்று நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 21 ரன்னிலும் ருத்ராஜ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர. இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்னில் வெளியேற இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனால் இந்திய அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார் ஜித்தேஷ் ஷர்மா. இவர்கள் இருவரும் இந்தியாவை சர்வில் இருந்து மீட்க போராடினர். ஐந்தாவது விக்கெட் ஜோடியாக 42 ரன்கள் சேர்த்த நிலையில் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 24 ரன்கள் எடுத்த ஜித்தேஷ் ஷர்மா அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இவரும் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாட இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இவருடன் அதிரடியாக விளையாடிய அக்சர் 21 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்க இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து விக்கெட்டுகள் இழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் பிலிப் 4 ரன்னிலும் ட்ராவல்ஸ் ஹெட் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து ஹார்டி 6 ரன்னிலும் டீம் டேவிட் 17 ரன்னிலும் மேத்யூ ஷார்ட் 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் அந்த அணி வீரர் பென் மேக்டர்மட் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா 129 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தாலும் அந்த அணியின் கேப்டன் மேத்யூ வேட் இறுதி வரை போராடினார். 12 பந்துகளுக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு பவுண்டரி அடித்ததால் ஒன்பது பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்று ஆனது. எனினும் முகேஷ் குமார் அந்த ஓவரை சிறப்பாக வீசினார். இறுதியில் ஆறு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஷிப் சிங் இறுதி ஓவரை வீசினார்.

முதல் இரண்டு பந்துகளை ரன்கள் விட்டுக் கொடுக்காமல் வீசியதால் அழுத்தம் ஆஸ்திரேலியா அணியின் பக்கம் சென்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது பந்தில் மேத்யூ வேட் ஆட்டம் இழந்தார். அவர் 15 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டம் இந்திய அணியின் பக்கம் வந்தது. இறுதியில் 2 பந்துகளுக்கு 9 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணியால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியின் பந்துவீச்சில் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங் மற்றும் ரவி பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அக்சர் பட்டேல் ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி தொடர் வருகின்ற 10ஆம் தேதி தொடங்க உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles