IND vs AUS.. 7 ரன் 5 விக்கெட்.. கடைசியில் திணறியும் ஆஸ்திரேலியாவுக்கு பாடம் புகட்டிய இந்திய அணி.. தொடரை வென்று சாதனை.!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரண்டு வெற்றிகளுடனும் ஆஸ்திரேலியா அணி ஒரு வெற்றியுடனும் இந்தத் தொடரில் இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று ராய்ப்பூரில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ருத்ராஜ் மற்றும் ஜெய் ஸ்வால் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 59 ஆக இருந்தபோது 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும் சூரியகுமார் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இதனால் இந்தியா 63 ரண்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ருத்ராஜ் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர். கடந்த போட்டியில் சதம் எடுத்த ருத்ராஜ் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆட வந்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். இவர் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் தீபக் சஹார் இருவரும் ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். எனினும் ரிங்கோசிங் அதிரடியால் இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் உடன் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆவேஷ் தான் ஒரு ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 167 ரன்னுக்கு 5-வது விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த 7 ரன்களில் 5 விக்கெட்டுகள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர் பிலிப் 8 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும் மற்றொரு துவக்க வீரர் ட்ராவஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஹார்டி 8 ரன்னிலும் மெக்டர்மட் 19 ரன்னிலும் டீம் டேவிட் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி நெருக்கடிக்கு உள்ளானது.

- Advertisement -

அந்த அணியின் மேத்யூ ஷார்ட் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 154 ரன்கள் 7 விக்கெட் இழந்திருந்தது. இதன் மூலம் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் கேப்டன் மேத்யூ வேட் 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இரண்டு ரன்னில் களத்தில் நின்றார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி வருகின்ற மூன்றாம் தேதி பெங்களூரில் வைத்து நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles