IND s AUS.. 426 ரன்.. 40 ஓவர்.. டி20-யில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்.. உலகச் சாம்பியனை பந்தாடிய இளம் இந்திய அணி.!

2023 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் மேத்யூ வேட் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா அணி முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இன்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

முதல் ஆறு ஓவர்களுக்குள் அதிரடியாக விளையாடிய ஜெய்ஷ்வால் 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பவர் பிளே முடிவில் இந்தியா 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இஷான் கிஷான் ஒரு முனையில் அதிரடியாக விளையாட மறுமுனையில் நிதானமாக விளையாடினார் ருத்ராஜ். இதனால் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைந்தது. அதிரடி காட்டிய இஷான் 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சூரியகுமார் 10 பந்துகளில் 19 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்தார் அதிரடி வீரர் ரிங்கு சிங்.

- Advertisement -

ஒரு முனையில் நிதானமாக ஆடிய ருத்ராஜ் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் எடுத்து 58 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார் . இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க உதவினார். இவரது சூறாவளி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. ரிங்கு சிங் வெறும் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். திலக் வர்மா 2 பந்துகளின் 7 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ சார்ட் இருவரும் 19 ரன்கள் ஆட்டம் இழந்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த இங்கிலீஷ் 2 ரன்னிலும் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி நாயகன் மேக்ஸ்வெல் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

- Advertisement -

எனினும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டிம் டேவிட் இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு பதற்றத்தை ஏற்படுத்தினார். இவர்கள் இருவரும் ஜோடியாக 81 ரன்கள் சேர்த்த நிலையில் 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்திருந்த டிம் டேவிட் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் ஆட்டம் மீண்டும் இந்திய அணியின் வசம் வந்தது.

இதனைத் தொடர்ந்து வந்த பின் வரிசை ஆட்டக்காரர்கள் அபாட், எல்லீஸ் மற்றும் ஜாம்பா ஆகியோர் முறையே ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா ஒன்பது விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் அந்த அணியின் கேப்டன் மேத்யூ வேட் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடி 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியின் பந்து வீச்சில் பிரதீஷ் கிருஷ்ணா மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles