நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்று தொடரையும் இழந்துள்ளது இந்திய அணி. இதன் மூலம் பல்வேறு பயங்கரமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் இழந்தால் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் நிலை வந்துவிடும் என்ற நிலையைத் தடுக்க தீவிரமான உள்ளது பிசிசிஐ.
பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால் புனேவில் 2வது டெஸ்ட்டில் வெற்றியை பெற்றே ஆக வேண்டுமென ஸ்பின் பிட்ச்சை வழங்கியது. ஆனால் அது இந்திய அனிக்கே பெரிய பின்னடைவாக மாறியது. இரு அணியின் ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்பட, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்ததே அவர்களின் வெற்றிக்கு வித்தியாசமாக அமைந்தது.
கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. 18 டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றியைக் கண்ட இந்தியாவுக்கு முற்றுப் புள்ளி வைத்து லேத்தம் தலைமையிலான நியூசிலாந்து.
இந்திய அணியின் பக்கம் இருந்த பல்வேறு சாதனைகள் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் அடித்து நொறுக்கபட்டுள்ளது. இதனால் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் புதிய பயிற்சியாளர் கம்பீருக்கும் பெரும் அவமானம். இந்த இரண்டு தோல்விகளின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் கூட பெரிய சிக்கல் நிலவியுள்ளது.
இந்தியாவுக்கு எஞ்சி இருக்கும் 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது . நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக் கண்டு தொடரை வெல்வதன் மூலம் மட்டுமே தகுதிப் பெற இயலும். ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களின் வலிமையான படையை எதிர்ப்பது மிகப் பெரிய சவாலாக அமையும்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றியை வசப்படுதுவது இந்திய அணியின் கட்டாயம். மேலும் இதில் தோற்றால் வொயிட் வாஷ் என்ற நிலை வந்து அது இன்னும் பெரிய அவமானத்தைக் கொண்டு வரும். இதனைத் தடுக்க மும்பையில் நடக்கும் 3வது டெஸ்ட்டில் வெற்றியை உறுதிப்படுத்த தீவிரமாக உள்ளார் கம்பீர்.
அதனால் இம்மாதம் தீபாவளி பண்டிகைக்கு 30 மற்றும் 31 வீரர்களுக்கு வழங்கிய விடுமுறை மீண்டும் பெறப்பட்டுள்ளது. சீனியர் வீரர்கள் ரோஹித், கோலி உட்பட அனைவரும் இரு தினங்களும் பயிற்சிக்கு வர வேண்டுமென ஆணை இடப்பட்டுள்ளது. பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர்கள் குழுவான கம்பீர் & கோவின் கடுமையான முடிவு இது ஆகும்.

