6,4,6,4,6,4 சிக்ஸர் மன்னன் அபிஷேக் ஓவரை தெறிக்க விட்ட சிஎஸ்கே வீரர்.. விஜய் ஹசாரே டிராபியில் அசத்தல் முழு விபரம்

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி விளையாடின. இதில் மும்பை வீரரான சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

- Advertisement -

இன்று நடைபெற்ற சி பிரிவு காலத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. அதற்குப் பின்னர் விளையாடிய மும்பை அணிக்கு ராகுவான்ஷி 23 மற்றும் முஷீர் கான் 21 இருவரும் விரைவாக வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய சிஎஸ்கே வீரரான சப்ராஸ்கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பஞ்சாப் கேப்டன் அபிஷேக் ஷர்மாவின் ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட, அதற்கு அடுத்த நான்கு பந்துகளும் இதே போல சிக்ஸர் மற்றும் பவுண்டரி 6,4,6,4,6,4 என ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்தார். 15 பந்தில் அரை சதம் அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பினைப் பெற்றார். அதற்குப் பின்னர் 20 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இருப்பினும் பஞ்சாப் அணி இறுதிக்கட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles