ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசை பட்டியல்.. யாருமே தொட முடியாத உச்சத்தில் அபிஷேக் சர்மா.. சூரியகுமார் யாதவும் முன்னேற்றம்.. முழு விவரம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இது ஏற்கனவே இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இதில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா தொடக்க இடத்தில் களம் இறங்கி இரண்டு பிரம்மாண்ட அரை சதங்கள் அடித்ததன் மூலமாக ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் யாருமே எளிதில் தொட முடியாத இடத்திற்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலை அபிஷேக் ஷர்மா, 929 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் இவரே இந்த வடிவத்தில் அதிக புள்ளிகள் எடுத்த பேட்ஸ்மேன் ஆகவும் சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 849 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவருக்கும் அபிஷேக்சர்மாவுக்கும் இடையே மொத்தமாக 80 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது.

- Advertisement -

அந்த அளவிற்கு அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கு பெறாமல் காயத்தால் விலகி இருக்கும் திலக் வர்மா 781 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும், கேப்டன் சூரியகுமார் யாதவ் ஐந்து இடங்கள் முன்னேறி 717 பள்ளிகள் உடன் 7வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசை பட்டியல்:

அபிஷேக் ஷர்மா – 929

- Advertisement -

பில் சால்ட் – 849

திலகம் வர்மா – 781

ஜோஸ் பட்லர் – 770

சாஹிப்ஜாதா ஃபர்ஹான் – 763

பத்தும் நிசாங்கா – 758

சூர்யகுமார் யாதவ் – 717

டிராவிஸ் ஹெட் – 713

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles