இந்தியாவில் நடைபெற்று வந்த உள்ளூர் டி20 தொடரான சையது முஸ்தாக் அலி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ஹரியானாவை தோற்கடித்த ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இறுதிப் போட்டியில் விளையாடிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. இதில் ஹரியானா பவுலர்களை அடித்து நொறுக்கிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை பறக்க விட்டார். இதற்குப் பிறகு விளையாடிய ஹரியானா 18.3 ஓவரில் 193 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த தொடரின் மூலமாக கேப்டன் இஷான் கிஷான் மொத்தமாக 33 சிக்சர்களை பறக்கவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக ஒரு டி20 தொடரில் அதிக சிக்சர் பறக்கவிட்ட விக்கெட் கீப்பர் கேப்டன் என்கிற உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் டோனி சிஎஸ்கே அணிக்காக 30 சிக்ஸர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

