இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் குமார் சங்ககாராவின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருக்கிறார்.
வதோதராவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிச்சல் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. 26 ரன் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்து வெளியேற அதற்கு பின்னர் வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடினார். குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடிக்க 42 ரன்கள் தேவைப்பட்டது.
19 ஆவது ஓவரில் விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார். 42 ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 28,016 ரன்கள் குவித்த இலங்கை அணி என்ற ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாராவின் சாதனையை முறியடித்தார். 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்களையும், 125 டி20 போட்டிகளில் 4188 ரன்களையும் குவித்துள்ள விராட் கோலி 309 ஒருநாள் போட்டிகளில் இதுவரை 14,599 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

