ஒரேயொரு ஆளு.. சிங்கம் மாதிரி நிற்கிறான்.. பென் டக்கெட் சாதனையை முறியடித்த ஜத்ரான்.. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் புது வரலாறு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க வீரர் பென் டக்கெட் புதிய சாதனையை படைத்தார். அந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பென் டக்கெட் 165 ரன்களை விளாசி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

- Advertisement -

இந்த சாதனையை ஒரே வாரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் முறியடித்துள்ளார். இன்று நடந்து வரும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிடி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

மாஸ் காட்டிய ஆஃப்கானிஸ்தான்

- Advertisement -

இதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் – இப்ராஹிம் ஜத்ரான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் குர்பாஸ் 6 ரன்களிலும், பின்னர் வந்த அடல் 4 ரன்களிலும், ரஹ்மத் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் கேப்டன் ஷாகிடி – ஜத்ரான் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சிறப்பாக ஆடிய இருவரும் 4வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஜத்ரான் அரைசதம் கடந்து ஆட்டத்தை கட்டமைத்தார். பின்னர் ஷாகிடி 40 ரன்களில் ஆட்டமிழக்க, அஸ்மத்துலா களமிறங்கி அதிரடியாக ஆடினார். இதனால் 40 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 212 ரன்களாக உயர்ந்தது. அதேபோல் 106 பந்துகளில் ஜத்ரான் சதம் விளாசி அசத்தினார்.

- Advertisement -

சாதித்த ஜத்ரான்

இதன் மூலமாக உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரு ஐசிசி தொடர்களிலும் சதம் விளாசிய முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 146 பந்துகளில் 6 சிக்ஸ், 12 பவுண்டரிகள் உட்பட 177 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்களை குவித்துள்ளது.

இதன் மூலமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ஜத்ரான் படைத்துள்ளார். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனையை படைத்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles