3 ஐசிசி பைனலில் 2 வென்று கொடுத்துள்ளார்.. ரோகித் சர்மாவை நோகடிக்காதீர்கள்.. அகர்கருக்கு முகமது கைப் கோரிக்கை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தொடருடன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா ஓய்வு?

ஏற்கனவே இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். 2027 உலகக்கோப்பை தொடருக்கும் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், இந்திய அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 

- Advertisement -

அதில் கைஃப், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரிடமும் ஓய்வு பெற வேண்டாம் என்று கேட்டு கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டுக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். ரோகித் சர்மா கடந்த 3 ஆண்டுகளில் 3 ஐசிசி இறுதிப்போட்டிகளுக்கு அழைத்து சென்று, 2ல் வென்று கொடுத்துள்ளார். ரோகித் சர்மாவின் ரசிகர்களில் நானும் ஒருவன்.

- Advertisement -

முகமது கைஃப் பேட்டி

அவர் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ரோகித் சர்மாவின் வயதை பலரும் பேசுகிறார்கள். ஆனால் எனது கவனம் ரோகித் சர்மாவின் நம்பர்களில் இருக்கிறது. ஒரு கேப்டனாக ரன்களை சேர்க்கிறார்.. ஓய்வறை சூழலை சிறப்பாக கையாள்கிறார். அவருக்கு 41 வயதாகினாலும், 2027 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த அவரிடம் தெம்பு இருக்கிறதா என்பதையே பார்ப்பேன். 

ஒருவேளை மாற்றம் செய்ய வேண்டுமென்றால், 2027 உலகக்கோப்பைக்கு பின் செய்யலாம். அதேபோல் இரு வீரர்களிடமும் முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேவையென்றால் இருவரின் வீட்டிற்கும் சென்று பேசுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles