ஐபிஎல் தொடரின் போது செய்த பயிற்சி.. பேட்டிங் சிறப்பாக ஆடுவதற்கு காரணம்.. சுப்மன் கில் பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களை விளாசினார்.

- Advertisement -

சுப்மன் கில் பேட்டி

அதேபோல் ஜடேஜா 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங்க் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்தது.

- Advertisement -

ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய களத்தில் உள்ளனர். இதன்பின் சுப்மன் கில் பேசும் போது, இந்திய அணி சிறந்த நிலையில் உள்ளதாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடரின் கடைசி நேரத்தில் சில விஷயங்களை பயிற்சி மேற்கொண்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டை களமிறங்குவதற்கு முன்பாக அந்த பயிற்சி முக்கியம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஃபீல்டிங் பயிற்சி

இதுவரை ஆடிய இன்னிங்சை பார்க்கும் போது, அந்த பயிற்சி முறைகள் எனக்கு பயன் கொடுத்துள்ளது என்று நினைக்கிறேன். அதேபோல் கடந்த 2 நாட்களாக எந்த வகையில் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. 2 நாட்களும் முழுமையாக பேட்டிங் மட்டுமே ஆடினேன். அதனால் ஸ்லிப் திசையில் கேட்ச் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் ஃபீல்டிங் மிக முக்கியமானது.

கடந்த போட்டியில் நாங்கள் ஆலோசித்த சில விஷயங்களை சரியாக செய்திருந்தாலே, ஆட்டம் வேறு மாதிரி மாறி இருந்திருக்கும். முதல் டெஸ்ட் போட்டியின் முடிவும் மாறி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். நாளைய ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணியால் 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தாலே, எளிதாக வெல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles