உண்மையா சொல்றேன் .. இப்போ அந்த ஒரு வீரருக்காக தான் இந்தியா மேட்ச் பார்க்கிறேன்.. ஆன்ட்ரே ரசல் ஆச்சரியமான பேட்டி.!

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் தோல்விக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக்கோப்பைச் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது .

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் இதைப் பற்றி இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நாளை பெங்களூரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. இந்த அணிக்கு இந்தியாவின் டி20 ஸ்டார் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் ருத்ராஜ் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் போன்ற அதிரடியான இளம் நட்சத்திரங்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த இளம் அணியில் சூரியகுமார் யாதவ் மட்டுமே அனுபவ வீரராக இருக்கிறார் .

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான ரசல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி பற்றிய தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் பேசியிருக்கும் அவர் இந்திய அணியின் இளம் வீரருக்காக தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்த்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் ரசல்” இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான t20 போட்டிகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். ஏதேனும் ஒரு போட்டியை பார்க்கத் தவறினால் கூட அந்தப் போட்டிகளின் ஹைலைட்ஸ் உடனடியாக பார்த்து விடுவேன். அதற்குக் காரணம் ரிங்கு சிங் . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சில ஆண்டுகளுக்கு முன் அவர் தேர்வானார். பயிற்சி போட்டிகளாக இருந்தாலும் சரி இல்லை வலை பயிற்சியாக இருந்தாலும் சரி இதுபோன்ற பெரிய ஷாட்களை இப்போதே ஆடியிருக்கிறார் . அவரிடம் ஏராளமான திறமை இருக்கிறது” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரசல் ” கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ச்சியாக கொல்கத்தா அணிக்காக போட்டிகளை வென்று கொடுத்தார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எந்த ஒரு வீரருக்கும் நம்பிக்கையை கொடுக்கும். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். போதும் அணியின் நலனில் அதிக அக்கறை செலுத்துபவர். தன்னைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அணிக்காக செயல்படுபவர் .

அவருடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இன்று இந்திய அணிக்காக ஆட வைத்திருக்கிறது. அவர் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை பார்க்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனுபவங்களின் மூலம் தன்னுடைய ஆட்டத் திறனை இன்னும் மேம்படுத்திக் கொண்டு வரும் காலங்களில் இந்திய அணிக்கு ஒரு சிறந்த வீரராக உருவெடுப்பார் என தெரிவித்திருக்கிறார் ரசல். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரிங்கோசிங் 174 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இந்தியா 174 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles