எம் எஸ் தோனி செய்த செயல்.. என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.. ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கமான பேட்டி

இந்திய அணியின் நிகழ்காலத்தில் மகத்தான சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் என்றால் அது ரவிச்சந்திரன் அஸ்வின். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த வரலாற்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூலம் 100 டெஸ்ட்களில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் படைத்தார். ஐபிஎல் இல் சென்னை அணிக்கு எதிராக அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் இடம் பிடித்தார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை நிரந்தர வீரராகவே மாறிவிட்ட அஸ்வின், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர், அணில் கும்ப்ளேவிற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் உலக கிரிக்கெட் வீரர்கள் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அணில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அஸ்வின், நூறாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற முக்கிய பங்காற்றியுள்ளார். தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால், ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய அஸ்வின் அடுத்த நாள் இந்திய அணிக்குள் மீண்டும் வந்து விளையாடியது கிரிக்கெட் மீதான அவரது அர்ப்பணிப்பு உணர்வை காட்டியது.

மேலும் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினைக் கௌரவிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு சிறந்த முறையில் மரியாதை அளித்தார். மேலும் இந்திய அணியின் தலைமை பயிர்ச்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு நினைவுப் பரிசினை வழங்கியிருந்தார்.டி20 லீக்குகளின் வரவால் குறைந்த டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடிவிட்டு ஓய்வு பெறும் வீரர்களுக்கு மத்தியில் அஸ்வின் சாதனை நிஜமாகவே மகத்தானது தான்.

- Advertisement -

இந்த சாதனையை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தியது. இந்த பாராட்டு விழாவில் அஸ்வினுக்கு நினைவாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றியதை சிறப்பிக்கும் வகையில் 500 தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.

எனவே விழாவின் போது தனது தொடக்க காலத்தைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்
“என்னுடைய முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நான் காலம் முழுவதும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். ஏனென்றால் எனது தொடக்க காலத்தில் அவர்தான் எனக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தார். தோனி தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுக்கு எதிராக தனது முதல் ஓரை வீச வைத்தார்.

2013 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து என்னை வெளியேற்ற நினைத்தார்கள். ஆனால் அப்போது மகேந்திர சிங் தோனி எனக்காக ஆதரவாக பேசினார். அஸ்வின் இதற்கு முன்னர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். எனவே அணியில் அவர் நீடிக்கப்பட வேண்டும் என்று ஆதரவு குரல் கொடுத்தார். என்றுமே எனக்காக அவர் தனது ஆதரவினை தெரிவித்து இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles