6, 6, 6, 6, 6, 6.. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரேயொரு கனவு இருக்கு.. அஸ்வினிடம் கூறிய சஞ்சு சாம்சன்.. நடக்குமா?

டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த பின், அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டவர் சஞ்சு சாம்சன். இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வந்தபின், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வாய்ப்பை பெற்று, இடத்தை நிரந்தரமாக்கி கொண்டார்.

- Advertisement -

சஞ்சு சாம்சனின் ஆசை

அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சஞ்சு சாம்சனின் ஆட்டம் உச்சத்திற்கு சென்றது. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சஞ்சு சாம்சன் முன்னேற்றம் அடைந்த சூழலில், சரியான நேரத்தில் இந்திய அணிக்கு கொண்டு வரப்பட்டிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்தது. இந்த நிலையில் அஸ்வின் உடனான உரையாடல் சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் கனவு குறித்து பேசி இருக்கிறார். 

- Advertisement -

அதில் சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆசை இருக்கிறது என்றால், அது ஒன்று தான். ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்று கூறி இருக்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது சஞ்சு சாம்சன், 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி அசத்தினார். அதன் மூலமாகவே சஞ்சு சாம்சன் தனது முழு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் அணி விவகாரம்

தற்போது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் அணி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதம் காரணமாக சஞ்சு சாம்சன் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்பட்டது. அவரை வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக சஞ்சு சாம்சன் பேசும் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் எல்லாமே கொடுத்தது. யாருமே நம்பாத போதும் கூட ராகுல் டிராவிட் மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதற்கான ராஜஸ்தான் அணிக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles