நான் சொல்றேன்.. அடுத்த தல தோனி இந்த இந்திய வீரர் தான்.. சுரேஷ் ரெய்னா அதிரடி கணிப்பு.!

இந்தியாவின் தற்போது 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆடி இருக்கும் இந்தியா தனது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. தனது நான்காவது போட்டியில் வருகின்ற வியாழக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிராக புனே நகரில் வைத்து விளையாட உள்ளது.

- Advertisement -

இந்தியா அணிக்காக 2011 மற்றும் 2015 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. இவர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கால் இறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடியவர். மேலும் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விராட் கோலி உடன் ஜோடியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி அரை சதம் எடுத்தவர்.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து சதம் எடுத்தவர். 50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கிரிக்கெட் விமர்சகராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

இவர் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் ஸ்டாக் என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தியாவின் அடுத்த தோனி இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தோனியிடம் இருக்கக்கூடிய சில தகுதிகள் ரோகித் சர்மாவிடம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். இது குறித்து விரிவாக பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா ” நான் இந்திய அணியின் பலவீரர்களை சந்தித்து பேசியபோது தோனிக்கு இருக்கக்கூடிய அதே மரியாதை ரோகித் சர்மாவிற்கும் இருப்பதாக தெரிவித்தனர். ரோகித் சர்மா ட்ரெஸ்ஸிங் ரூமில் மிகவும் நட்புடன் இருக்கக்கூடியவர்” என தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக பேசிய ரெய்னா” ரோகித் சர்மா தான் இந்திய அணியின் அடுத்த மகேந்திர சிங் தோனி. நான் பார்த்திருக்கிறேன் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். மற்ற வீரர்களுடன் நட்புடன் பழகுவார். மற்ற வீரர்கள் கூறுவதை கேட்கவும் விரும்பக் கூடியவர். வீரர்களுக்கு அதிகமான நம்பிக்கையை கொடுக்கக் கூடியவர். மேலும் தான் முன்னின்று அணியை வழிநடத்த வேண்டும் என்று நினைப்பவர்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஒரு கேப்டன் தான் முன் நின்று அணியை வழி நடத்துவதோடு டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கக்கூடிய மற்ற வீரர்களுக்கும் மரியாதை கொடுக்கும்போது அந்த அணியின் பலம் இரண்டு மடங்காக உயரும். அதுதான் தோனியும் செய்து காட்டினார். தற்போது அதைத்தான் ரோஹித் சர்மாவும் செய்து கொண்டிருக்கிறார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார். இந்திய வீரர்கள் தோனிக்கு கொடுக்கக் கூடிய அதே மரியாதையை ரோகித் சர்மாவிற்கும் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்ற வரும் உலக கோப்பையில் ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் ஆஸ்திரேலியா அணியுடன் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி உடன் அதிரடியாக 131 ரன்கள் எடுத்தார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா தொடர்ச்சியாக அதிரடியாக ஆடி இந்தியா அணிக்கு சிறப்பான ஒரு துவக்கத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles